News December 24, 2024
மீனவர்கள் 17 பேர் கைது

தலை மன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. அவர்களது 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கை அதிபர் இந்தியா வந்துபோன நிலையிலும் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.
Similar News
News September 10, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

ஆசியக் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை வீழ்த்தியது. இன்று நடந்த சூப்பர்-4 சுற்றில் பலமான தெ.கொரியாவுடன் மோதிய இந்திய அணி 4- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில் இதுவரை தோல்வி அடையாத அணியாக வலம்வரும் இந்தியா, அடுத்து சீனாவை எதிர்கொள்கிறது. ஆசியக் கோப்பையை வென்றால் 2026 உலகக் கோப்பைக்கு இந்தியா நேரடியாக தகுதிபெறும். அட்வான்ஸ் வாழ்த்துகள்!
News September 10, 2025
SCIENCE: டாக்டர்கள் நாக்கை நீட்ட சொல்வது ஏன் தெரியுமா?

உடலில் எந்த பிரச்னை என்றாலும் அதை கண்ணாடி போல் நமது நாக்கு காட்டிவிடுமாம். உதாரணத்துக்கு, நாக்கு மஞ்சளாக இருந்தால் நீர்சத்து குறைபாடு, நாக்கின் நுனி மட்டும் சிவப்பாக இருந்தால் மன அழுத்தம், நாக்கு வெள்ளையாக இருந்தால் நோய்தொற்று, அடி நாக்கு சிவப்பாக இருந்தால் சுவாசப் பிரச்னைகள் இருப்பதாக அர்த்தமாம். இதனால்தான் ஹாஸ்பிடலுக்கு சென்றாலே நாக்கை காட்டும்படி மருத்துவர் கேட்கிறார். SHARE.
News September 10, 2025
நேபாள இடைக்கால அரசு தலைவர் தேர்வு

நேபாளத்தின் இடைக்கால அரசு தலைவராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஊழல் முறைகேடு, சமூக வலைதளங்களுக்கு தடை ஆகியவற்றை எதிர்த்து அந்நாட்டில் இளைஞர்களின் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அந்நாட்டின் பிரதமராக இருந்த சர்மா ஒலி, குடியரசு தலைவர் ராம் சந்திர பவுடல் ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது இடைக்கால அரசு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.