News December 24, 2024
வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு ஆட்சியர் தகவல்

தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் கம்போடியா, தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளில் வேலைக்கு அதிக சம்பளம் என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு மோசடியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் தமிழக அரசு அயலாக தமிழர் நலத்துறை கட்டணமில்லா 24 மணி நேரம் அழைப்பு உதவி மையத்தின் 8069009901 எண்னை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News August 15, 2025
தங்க பதக்கம் வென்ற திருச்சி மாவட்ட காவலருக்கு பாராட்டு

தமிழ்நாடு காவல்துறையினருக்கு மாநில அளவிலான திறனாய்வு போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான காவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது ‘Scientific aids in investigation’ பிரிவில் நடைபெற்ற போட்டியில், கல்லக்குடி காவல்நிலைய தனிப்பிரிவு காவலர் விஜயகுமார் தங்க பதக்கம் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் பதக்கம்(ம)சான்றிதழை வழங்கினார்.
News August 15, 2025
திருச்சி: 81 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ் நாடு கூட்டுறவு துறையின் கீழ் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ’81’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 15, 2025
திருச்சியில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் ஆக.31-ம் தேதி, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் திருச்சி மாவட்ட வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE NOW !!