News December 24, 2024
அன்னை தெரேசாவின் பொன்மொழிகள்

▶ நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள்.
▶ அமைதி ஒரு புன்னகையில் தொடங்குகிறது.
▶ மகிழ்ச்சிக்குச் சாவி எதுவும் இல்லை, கதவு எப்போதும் திறந்தே உள்ளது
▶ சாதாரண விஷயங்களை அசாதாரணமான அன்புடன் செய்யுங்கள்.
▶ மனிதர்களை மதிப்பிட்டுக்கொண்டே இருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமிருக்காது.
Similar News
News July 7, 2025
நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.
News July 7, 2025
நாம் இருவரும் சேரும் சமயம்…!

SJ சூர்யா இயக்கும் ‘கில்லர்’ பட இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கமிட்டாகியுள்ளார். நேற்றைய தினம், படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என SJ சூர்யா கேட்ட கேள்வி நெட்டிசன்களிடம் படுவைரலானது. அதற்கு இன்று காலை பதிலளிப்பதாகவும் SJ சூர்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ‘நாம் இருவரும் சேரும் சமயம்’ என ‘அன்பே ஆருயிரே’ படத்தில் வரும் பாட்டு வரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News July 7, 2025
பொய் சொல்கிறதா TNPSC? அன்புமணி சரமாரி கேள்வி

2024, ஜூலையில் 17,502 பேருக்கு பணி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு 8,618 பேரே தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அறிவிப்புக்கு முன்பு எழுதப்பட்ட தேர்வு முடிவுகளைக் கொண்டு 17,702 பேரை தேர்வு செய்துவிட்டோம் என்று TNPSC அறிக்கை விடுவதா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். TNPSC, திமுகவின் துணை அமைப்பாக மாறாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.