News March 24, 2024
300 பள்ளி குழந்தைகளை விடுவித்த தீவிரவாதிகள்

நைஜீரியாவில் கடத்தி சென்ற 300 பள்ளி குழந்தைகளையும் தீவிரவாதிகள் விடுவித்தனர். கதுனா மாகாணத்தில் உள்ள பள்ளிக்குள் கடந்த 7ஆம் தேதி புகுந்த தீவிரவாதிகள், 300 குழந்தைகளை கடத்திச் சென்றனர். இதையடுத்து அவர்களுடன் நைஜீரிய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில், 300 பேரும் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர். 300 பேரை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.
Similar News
News February 17, 2026
அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனா மாமியார்

சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்த லீமா ரோஸ் மார்ட்டின், தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஐஜேகேவில் 14 ஆண்டுகளுக்கு மேல் இருந்த அவர், இணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார். ஆனால், கட்சித் தலைமை தன்னை புறக்கணிப்பதாகவும், சமீபத்தில் நடந்த மாநாட்டிற்கு கூட அழைக்கவில்லை எனவும் கூறி ஐஜேகேவில் இருந்து விலகிய நிலையில், தற்போது அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
News February 17, 2026
விஜய்க்கு பச்சை கொடி காட்டிய போலீஸ்

வேலூர் அகரம்சேரி பகுதியில் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறவிருக்கும் விஜய் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் நடக்கும் இந்த பரப்புரை கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், <<19134315>>சேலம் துயரம்போல்<<>> நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 17, 2026
தமிழகத்தில் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1.37 லட்சம் கடன்

2026-27 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ₹10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு தரவுகளின்படி, தமிழக மக்கள்தொகை 7 கோடியே 72 லட்சமாக இருக்குமென கருதப்படுகிறது. அந்த வகையில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் சராசரியாக ₹1.37 லட்சம் மறைமுக கடன் சுமை உள்ளது. உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.


