News December 23, 2024
மனித உரிமைகள் ஆணையத் தலைவராக “தமிழன்”

NHRC தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். 23 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், சென்னை உட்பட பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாகவும் பதவி வகித்தார். 2019-23 வரை SC நீதிபதியாக முக்கியத் தீர்ப்புகளை வழங்கினார். Ex CJI சந்திரசூட்டை நியமிக்க, ராகுல், கார்கே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News September 10, 2025
செங்கோட்டையன் புதிய முடிவு.. மீண்டும் அதிமுகவில் பரபரப்பு

அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி வரும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ் அதிரடி காட்டினார். இதனால், முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டுள்ளதால், அடுத்தகட்ட நகர்வு குறித்து தற்போது ஆலோசனை செய்து வருகிறார். இன்னும் சற்றுநேரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பதால், குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டின் முன்பு ஆதாரவாளர்கள் குவிந்துள்ளனர்.
News September 10, 2025
தனி ஒருவனுக்கு இன்று பிறந்தநாள்!

குடும்ப ஆடியன்ஸை கவர்ந்த சாக்லெட் பாய் ரவி மோகனுக்கு இன்று பிறந்தநாள். கோலிவுட்டில் பொன்னியின் செல்வன் என்றாலும் ஜெயம், எம்.குமரன் S/o மஹாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் என அண்ணணுடன் கை கோர்த்த போதெல்லாம் பாக்ஸ் ஆபீஸை தெறிக்க விட்டார். தற்போது வில்லன், தயாரிப்பாளர், டைரக்டர் போன்ற பல்வேறு பரிணாமங்களிலும் பயணிக்க தொடங்கிவிட்டவரின் படங்களில் உங்களுக்கு பிடிச்சது எது?
News September 10, 2025
ராஜீவ் காந்தி பாணியில் விஜய்?

தேர்தல் பரப்புரையை தொடங்கும் விஜய்க்கு, ஆளுங்கட்சியால் பல முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக தவெக குற்றஞ்சாட்டுகிறது. பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் விஜய் தங்குவதற்குகூட அறைகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பிரசாரம் மேற்கொள்ளும் தொகுதிகளில் உள்ள தொண்டர்களின் வீடுகளில் தங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். 1980-களில் ராஜீவ் காந்தியும் இதையே செய்தார். இது விஜய்க்கு கைகொடுக்குமா? கமெண்ட் பண்னுங்க