News December 23, 2024
குறைதீர் கூட்டத்தில் 407 மனுக்கள் பெறப்பட்டன

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (டிச.23) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 407 மனுக்கள் பெறப்பட்டன.
Similar News
News August 13, 2025
சிவகங்கை: உதவி எண்கள் SAVE IT..!

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த உதவி எண்களை SAVE பண்ணி வச்சிக்கோங்க
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பெண்கள் பாதுகாப்பு – 191
▶️ காவல் மற்றும் ஆம்புலன்ஸ் – 112
▶️ இணைய பாதுகாப்பு – 1930
தேவையான அவசர காலங்களில், இந்த எண்களை தொடர்பு கொண்டால் உடனடியாக உதவி கிடைக்கும். இந்த தகவலை SHARE பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க..!
News August 13, 2025
சிவகங்கை: மதுபான கடைகள் மூடல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
விநாயகர் சதுர்த்தி – ஆட்சியர் அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.