News December 23, 2024

சட்டென நழுவும் திருமாவளவன்

image

திமுக கூட்டணியில் 25 தொகுதிகளை கேட்போம் என்று விசிக நிர்வாகி வன்னி அரசு கூறியது தொடர்பாக திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில், “அது வன்னி அரசுவின் தனிப்பட்ட கருத்து. அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்று நிர்வாகிகள் கேட்பது இயல்புதான்” என்று அவர் கூறினார். கூட்டணி கட்சிகளிடம் முன்கூட்டியே நிபந்தனைகள் வைப்பதில்லை என்று கூறி கச்சிதமாக அவர் நழுவினார்.

Similar News

News September 10, 2025

சந்திரபாபு நாயுடு கிணற்றில் குதித்து சாக வேண்டும்: ஜெகன்

image

ஆந்திர CM சந்திரபாபு நாயுடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் விமர்சித்துள்ள விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதால், விவசாயிகள் நாள் முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதைக் குறிப்பிட்டு, ‘இதற்கு CM சந்திரபாபு நாயுடு கிணற்றில் குதித்து செத்துப் போவது நல்லது’ என்று ஜெகன் பேசியுள்ளார். ஒரு முதல்வரை இப்படி விமர்சிக்கலாமா?

News September 10, 2025

சினிமா நடுவர்களுக்கானது அல்ல: பிருத்விராஜ் ஓபன் டாக்

image

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு தேசிய விருது அளிக்கப்படாதது விவாதமானது. இதுகுறித்து பேசியுள்ள அப்படத்தின் நாயகன் பிருத்விராஜ், 10 பேர் உட்கார்ந்து ஒரு படத்தை பார்த்து மதிப்பீடு செய்யவோ (அ) ஒரு நடுவர் படம் பற்றி தீர்மானிப்பதற்காகவோ சினிமா உருவாக்கப்படுவதில்லை, மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன என கூறினார். அத்துடன், ஆடுஜீவிதம் படத்துக்கு மக்கள் ஏற்கெனவே மிகப்பெரிய விருதை வழங்கிவிட்டனர் என்றார்.

News September 10, 2025

சற்றுமுன்: புதிய பாதையை தேர்ந்தெடுத்தார் விஜய்

image

திருச்சியில் செப்.13-ம் தேதி புதிய பாதையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். திருச்சியின் முக்கிய இடமான சத்திரம் பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால், தற்போது, TVS டோல்கேட்டில் பரப்புரையை தொடங்கி, மரக்கடை MGR சிலை அருகே மக்கள் மத்தியில் விஜய் பேசுகிறார். இதன்பின், காந்தி மார்க்கெட் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, அரியலூர் செல்கிறார்.

error: Content is protected !!