News December 23, 2024
சந்தைக்கு வந்த 2 வகை புதிய ஸ்கூட்டிகள்

ஹோண்டா நிறுவனம் புதிய ‘Activa 125’ ஸ்கூட்டியை அறிமுகம் செய்துள்ளது. வெள்ளை, மெரூன், ப்ளூ உள்ளிட்ட 6 கலர்களில், இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. DLX வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ₹94,422 ஆகும். அதேபோல் Key Fob, Keyless Ignition கூடிய H ஸ்மார்ட் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ₹97,146 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 10, 2025
சற்றுமுன்: புதிய பாதையை தேர்ந்தெடுத்தார் விஜய்

திருச்சியில் செப்.13-ம் தேதி புதிய பாதையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். திருச்சியின் முக்கிய இடமான சத்திரம் பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால், தற்போது, TVS டோல்கேட்டில் பரப்புரையை தொடங்கி, மரக்கடை MGR சிலை அருகே மக்கள் மத்தியில் விஜய் பேசுகிறார். இதன்பின், காந்தி மார்க்கெட் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, அரியலூர் செல்கிறார்.
News September 10, 2025
மகளிருக்கான EPS வாக்குறுதிகள்.. திமுக ட்விஸ்ட்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் EPS, அதிமுக ஆட்சி அமைந்தவுடன், திமுக அரசால் நிறுத்தப்பட்ட ‘தாலிக்கு தங்கம்’ திட்டம் கொண்டுவரப்படும் என தொடர்ந்து கூறி வருகிறார். புதுமண தம்பதிகளுக்கு வேட்டி, சேலை, தீபாவளிக்கு புடவை என்றும் வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இந்நிலையில், பெண்களுக்கு இலவச தங்கம் வழங்கும் வகையில், TN அரசு <<17666302>>தங்க<<>> நாணயங்களுக்கு டெண்டர் கோரியுள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது.
News September 10, 2025
EPS-க்கு கொலை மிரட்டல் விடுக்கவில்லை: உதயநிதி

அதிமுக ஐசியுவில் சென்றுவிடும் என DCM உதயநிதி சொன்னது, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பது போல் இருப்பதாக EPS தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கமளித்த உதயநிதி, பாஜகவின் சர்ஜரியால், அதிமுக ஐசியுவில் சேர்க்கப்படும் நிலையில் இருப்பதைதான் அப்படி சொன்னதாகவும், 100 ஆண்டுகள் உடல்நலத்தோடு EPS வாழவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுபவரே உண்மையான தலைவர் என EPS-ஐ விமர்சித்துள்ளார்.