News December 23, 2024
நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – தென்மேற்கு திசையில் நாளை (டிச.24) தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாளை (டிச.24) செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.
Similar News
News August 5, 2025
செங்கல்பட்டு: பாலாற்றின் நடுவே அழகிய தீவு

செங்கல்பட்டு பரமேஸ்வரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். பாலாற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயில் பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சி அளிக்கிறது. மூலவராக கைலாச நாதரும், கனகாம்பிகையும் உள்ள நிலையில், தீவு போன்ற இந்த கோயிலின் அமைப்பு அமைதி தரும் வகையில் உள்ளது. இங்கு வழிபட்டால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News August 5, 2025
செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

செங்கல்பட்டில் புதிய ரேஷன் அட்டை (மின்னணு கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. <
News August 5, 2025
செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றாலோ (அ) உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் இந்த தளத்திலே புகார் அளிக்கலாம். முதலில் உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும். உங்கள் தொலைபேசி எண் & இ-மெயில் முகவரியை உள்ளிட வேண்டும். வகைப்பாடு என்னும் இடத்தில மின்னணு அட்டை கிடைக்க பெறவில்லை என்பதை தேர்வு செய்து உங்கள் புகாரை அனுப்பவும். இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!