News December 23, 2024

டி20 கிங் என நிரூபித்த இந்திய அணி!

image

கிரிக்கெட்டில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் ஒரு அரிய சாதனை படைத்துள்ளன. அதாவது உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை டி20 வடிவில் தொடங்கிய முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை 3 முறை நிகழ்த்தியுள்ளது. 2007இல் ஆடவர் T20 உலகக் கோப்பையையும், 2023இல் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் T20 WC மற்றும் இந்த ஆண்டு U-19 பெண்கள் ஆசியக் கோப்பையையும் வென்று அசத்தியுள்ளது.

Similar News

News September 10, 2025

BREAKING: கூட்டணியில் இணைகிறேன்.. TTV ட்விஸ்ட்

image

TTV, OPS மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று நயினார், அண்ணாமலை நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், NDA கூட்டணி முதல்வர் வேட்பாளரான EPS-ஐ மாற்றினால், கூட்டணியில் இணைவதாக TTV அறிவித்துள்ளார். இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத BJP தலைமை, செங்கோட்டையனை போல், தினகரனையும் சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்கான அசைன்மென்ட் அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.

News September 10, 2025

செப்.12-ல் சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

image

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணன் வரும் 12-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில், அவர் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகும் 3வது துணை ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

News September 10, 2025

12 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்

image

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மழை நேரத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

error: Content is protected !!