News March 24, 2024
வளசரவாக்கம் குடிநீர் குழாய் உடைப்பு – பொதுமக்கள் அவதி

சென்னை போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது . சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கின.
Similar News
News August 18, 2025
வீடியோ பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️ தாட்கோ வழங்கும் இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
▶️ 18 முதல் 30 வயது வரை கொண்டவராக இருக்க வேண்டும்.
▶️ விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
▶️ தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்
▶️ https://iei.tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
News August 18, 2025
சென்னை: சினிமா, ஊடகதுறையில் சாதிக்க ஆசையா?

வீடியோ எடுப்பதில் ஆர்வம் இருக்கா? அதனையே வேலையாக மாற்றிக்கொள்ள சூப்பர் வாய்ப்பு அமைந்துள்ளது. தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு (ம) வடிவமைப்பு பயிற்சியை 3 மாதங்களுக்கு வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் (ம) சினிமா, ஊடகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படுகிறது. விண்ணப்பிக்க <
News August 18, 2025
சென்னையில் இங்கு தண்ணீர் வராது! ALERT

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட்.18-ம் தேதி 5 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஆக.18-ம் தேதி காலை 8 மணி முதல் ஆக.19-ம் தேதி காலை 8 மணி வரை தண்ணீர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மக்களே தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க)