News March 24, 2024
கன்னியாகுமரி: செல்போன் பறித்த சிறுவர்கள் கைது

கன்னியாகுமரி அருகே உள்ள சிலுவை நகர் பகுதியை சேர்ந்தவர் சூசை (57), மீனவர்.
இவர் கன்னியாகுமரியில் சீரோ பாயிண்ட் பகுதியில் நேற்று செல்போன் பேசிய படி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 15 வயது மதிக்கத்தக்க 3 சிறுவர்கள் அவரை பின் தொடர்ந்து வந்தனர். திடீரென சூசை கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் 3 சிறுவர்களையும் கைது செய்தனர்.
Similar News
News November 3, 2025
குமரியில் டிஎஸ்பி.க்கள் இடமாற்றம்

குமரி மாவட்டம் தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கோட்டத்திற்கும், சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்ட டிஎஸ்பி சுரேஷ்குமார் தக்கலை உட்கோட்ட துணை கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று கன்னியாகுமரி மாவட்ட நில மோசடி கருப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் கண்ணதாசனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News November 3, 2025
குமரி: முற்றுகை போராட்டம் நாதக நிர்வாகிக்கு நெஞ்சுவலி

இரணியல் சந்திப்பில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (நவ-2) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது அதிக நேரம் வெயிலில் நின்ற காரணத்தால் குளச்சல் தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன் கைது செய்யப்பட்டு மண்டபத்திற்கு கொண்டு செல்லும் வழியில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக நெய்யூர் சிஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
News November 3, 2025
9 நாட்களுக்குப்பின் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

பெருமழை காரணமாக கடந்த 9 நாட்களாக திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்து கோதையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் கோதை ஆற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் மிமாக தண்ணீர் கொட்டுகிறது. இதனால் திற்பரப்பியின் துவக்கத்தில் உள்ள இரண்டு பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கபட்டுள்ளனர்.


