News December 22, 2024
எது ஆணவம்? விஜய்யை விளாசிய கரு.பழனியப்பன்

200 தொகுதிகளில் வெல்வோம் என ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என இயக்குநர் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கட்சி தொடங்கிய உடனே ஒருவர் ஆட்சிக்கு வந்துவிடுவேன் எனக் கூறுவதுதான் ஆணவப்பேச்சு என்றார். நம்பிக்கைக்கும், அதீத நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 10, 2025
திமுக அரசு ஒரு பித்தலாட்ட அரசு: EPS

திமுக அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என EPS கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட தொழில் முதலீடுகள், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன் என அவர் X தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயத்தில் திமுக அரசு பொய்யான புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் EPS சாடியுள்ளார்.
News September 10, 2025
துணை ஜனாதிபதிக்கு சம்பளம் கிடையாது!

துணை ஜனாதிபதியாக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். நாட்டின் 2-வது உயரிய பதவியான துணை ஜனாதிபதிக்கு சம்பளம் கிடையாது என்பது தெரியுமா? உண்மைதான். அரசியல் சட்ட அந்தஸ்து கொண்ட பதவிகளில், சம்பளம் இல்லாத ஒரே பதவி இது மட்டும் தான். ஆனால், ராஜ்யசபா தலைவராக பணியாற்றுவதற்காக, அவருக்கு மாதம் ₹4 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இதுபோக இலவச பங்களா, மருத்துவப்படி, விமான பயணம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
News September 10, 2025
வரலாற்று சாதனையை படைப்பாரா அர்ஷ்தீப்?

ஆசிய கோப்பையில் இந்திய அணி நாளை UAE-ஐ எதிர்கொள்கிறது. இதில் அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் எடுத்தால், வரலாற்று சாதனையை படைப்பார். சர்வதேச டி20-களில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும், உலகளவில் விரைவாக 100 சர்வதேச டி20 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் செய்ய வாய்ப்புள்ளது. இதுவரை 63 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப், 99 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.