News December 22, 2024
ஜனவரி 20ஆம் தேதி.. பீதியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அகதிகளை வெளியேற்றுவேன் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, அதிபராக ஜன. 20இல் அவர் பதவியேற்கவுள்ளார். அவர் பதவியேற்றதும் அகதிகளை வெளியேற்றும் உத்தரவில் முதல் கையெழுத்திடுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், அங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்று ஜன.20ஆம் தேதியை நினைத்து பீதியில் உள்ளனர்.
Similar News
News September 5, 2025
சட்டம் அறிவோம்: இந்த சட்டம் ஆண்களுக்கு தெரியணும்!

சில மனைவிகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் கணவனை மிரட்டி குடும்பத்தின் அமைதியையும், நிம்மதியையும் சிதைக்கும் நிலை உருவாகலாம். இத்தகைய சூழலில், BNS பிரிவு 351 உதவும். ஒருவரை அச்சுறுத்தி அவரை சேதப்படுத்தும் நோக்கத்துடன், மிரட்டும் செயலைக் குற்றமாகக் கருதும் தண்டனை சட்டம் இது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 2 ஆண்டுகளும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரையும் சிறை & அபராதம் விதிக்கப்படும். SHARE IT.
News September 5, 2025
BCCI பொறுப்புக்கு காய் நகர்த்தும் பிரவீன் குமார்

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற, முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் விண்ணப்பித்துள்ளார். BCCI-ன் தேசிய அணிக்கான தேர்வுக்குழுவில், 2 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்பதால், பிரவீன் குமார் தற்போது விண்ணப்பித்துள்ளார். அதேபோல், மற்றொரு முன்னாள் வீரரான RP சிங்கும் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 5, 2025
செங்கோட்டையன் மனம் திறக்கவில்லை: திருமா

செங்கோட்டையன் சொன்னது போல் முழுமையாக, மனம் திறந்து பேசவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை, ஆனாலும் அவர் இன்னும் வெளிப்படையாகவே பேசியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். பெரியார் இயக்கம் என்ற முறையில் விசிக, அதிமுகவை பெரிதும் மதிக்கிறது என்றார்.