News December 22, 2024

1,392 பேருக்கு ரூபாய் 61.5 லட்சம் அபராதம்

image

சேலம் சரகத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஹெல்மெட் அணியாமல் சென்ற 49 பேர், அதிவேகமாக வாகனத்தை ஓட்டிய 233 பேர், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 183 பேர் என போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 1,392 பேருக்கு சுமார் ரூபாய் 61 லட்சத்து 50 ஆயிரத்து 760 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 136 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News September 5, 2025

சேலம்: வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகளை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சேலம் வழியாக செல்லும் மதுரை- பெங்களூரு கண்டோன்மென்ட்- மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (20671/20672) கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், புதிய நடைமுறை வரும் செப்.11- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 5, 2025

கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணிக்கு 4,000 பேர் விண்ணப்பம்!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 148 உதவியாளர் பணியிடங்களுக்கு 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் அக்.11- ஆம் தேதி 4 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. 200 கேள்விகளுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சிப் பெறுபவர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 5, 2025

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அமைச்சர்!

image

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக இன்று செப்டம்பர் 5-ம் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் “கற்பது மட்டும் போதாது, கேட்பதும்,கேள்வி கேட்பதும் தான் முன்னேற்றம்” என கற்றுத் தந்த நம் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!