News December 22, 2024

கிறிஸ்துமஸ் மரத்தின் வரலாறு தெரியுமா?

image

16ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் மார்டின் லூதர் என்பவர் வீட்டிற்கு வரும்போது, வாடாமல் இருக்கும் கரும்பச்சை நிற மர இலைகளுக்கு மத்தியில் ஒளிரும் நட்சத்திரங்களால் ஆச்சரியமடைந்து, அதை அனைவரிடமும் கூறி, வீட்டிலும் இவ்வாறு அலங்காரம் செய்யும் வழக்கத்தை அறிமுகம் செய்கிறார். இப்படி அலங்கரிப்பதன் மூலம், இயேசுவே வீட்டிற்கு வந்திருப்பதாக அர்த்தம் என மக்கள் கருத, அது பண்டிகையின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது.

Similar News

News July 6, 2025

தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு: தலைவர்கள் அஞ்சலி

image

மூத்த <<16955086>>தமிழறிஞர் வா.மு.சேதுராமன்<<>> உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுவரை, CM ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், வைகோ, வேல்முருகன், மல்லை சத்யா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. சேதுராமனை கௌரவிக்கும் விதமாக அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு சேதுராமன் குடும்பத்தினர் இன்று நன்றி தெரிவித்துள்ளனர்.

News July 6, 2025

திமுக, அதிமுகவிடம் இருந்து கற்க வேண்டும்: வானதி

image

பூத் கமிட்டியை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பதை திமுக, அதிமுகவிடம் இருந்து பாஜக கற்க வேண்டும் என்று MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்று வரும் பூத் கமிட்டி பயிலரங்கில் பேசிய அவர், வாக்கு சேகரிப்பில் இரு கட்சிகளும் பூத் மாஸ்டர்களாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, அவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு பாஜக மாஸ்டர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

News July 6, 2025

60 நாள்கள்; 9 மணி நேர தூக்கம்.. ₹9.1 லட்சம் வென்ற இளம்பெண்

image

‘Wakefit’ நடத்திய போட்டியில் புனேவை சேர்ந்த பூஜா மாதவ்(22), 60 நாள்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 9 மணி நேரம் தூங்கி ₹9.1 லட்சம் பரிசு வென்றுள்ளார். 4-வது ஆண்டாக இந்த ‘Sleep Champion of the Year’ போட்டி நடந்தது. நாடு முழுவதும் இருந்து சுமார் 1 லட்சம் பேர் அப்ளை செய்த நிலையில் 15 பேர் மட்டுமே இறுதியாக தேர்வாகியிருந்தனர். இந்தாண்டு பரிசு வென்ற பூஜா UPSC தேர்வுக்கு தயாராகி வருகிறாராம்.

error: Content is protected !!