News December 22, 2024

திருக்காட்டுப்பள்ளியில் லாரி மோதி விவசாயி பலி

image

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்செனம் பூண்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (48). விவசாயியான இவர் நேற்று மாலை திருக்காட்டுப்பள்ளிக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்ற போது புதிய காவிரி ஆற்று பாலம் அருகே பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சீனிவாசன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 22, 2025

தேசிய கொடியை அவமதித்த நபர் கைது

image

கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைத்தீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவிந்த வல்லப பந்துலு என்பவர், நாச்சியார் கோவில் பகுதியில் 8 குளங்களை காணவில்லை என பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, தனது இடுப்பில் தேசிய கொடியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது தேசிய கொடிய அவமதித்ததாக வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.

News August 22, 2025

தஞ்சாவூரில் விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு

image

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான, விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

தஞ்சாவூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் செப்.4-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920/- வரை வழங்கப்படும். மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!