News December 22, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: அடக்கமுடைமை ▶குறள் எண்: 125 ▶குறள்: எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. ▶பொருள்: பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

Similar News

News September 10, 2025

ஹீரோயினே இல்லாத காதல் படத்தை இயக்கும் பிரேம்குமார்

image

விக்ரமை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் பிரேம்குமார் சமீபத்தில் அறிவித்தார். ஆனால், இதன் ஸ்கிரிப்ட் பணிகளுக்கு நேரமெடுக்கும் என்பதால், ஃபஹத் ஃபாசில் உடன் இணையவுள்ளாராம். இது குறைந்த கேரக்டர்களை கொண்ட ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ளதாம். இதனையடுத்து, 9 கேரக்டர்களைக் கொண்டு அட்வெஞ்சர் படம், ஹீரோயின் இல்லாமல் காதல் படம் என அடுத்தடுத்து படம் இயக்கவுள்ளதாக பிரேம் கூறியுள்ளார்.

News September 10, 2025

45 மாதங்களில் 6,700 கொலைகள்: H.ராஜா தாக்கு

image

மீண்டும் திமுக அரசு அமைந்தால் அடுத்த தலைமுறை அழிந்துபோகும் என்று H.ராஜா கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில் CM ஸ்டாலின் பெரியார் படத்தை திறந்து வைத்த நிலையில், பணம் கட்டினால் அங்கு யார் வேண்டுமானாலும் படத்தை திறந்து வைக்கலாம், கூட்டம் நடத்தலாம் என கடுமையாக சாடினார்.

News September 10, 2025

BREAKING: இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, முதல் மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால், அந்த மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

error: Content is protected !!