News December 21, 2024

கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு நாளை தொடக்கம்

image

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, டிச.23,30 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சிவேலிக்கும், டிச.24,31 தேதிகளில் கொச்சிவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் (06043/06044) இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும். முன்பதிவு நாளை (டிச.22) காலை 08.00 மணிக்கு தொடங்குகிறது.

Similar News

News September 5, 2025

சேலம்: வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகளை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சேலம் வழியாக செல்லும் மதுரை- பெங்களூரு கண்டோன்மென்ட்- மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (20671/20672) கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், புதிய நடைமுறை வரும் செப்.11- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 5, 2025

கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணிக்கு 4,000 பேர் விண்ணப்பம்!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 148 உதவியாளர் பணியிடங்களுக்கு 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் அக்.11- ஆம் தேதி 4 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. 200 கேள்விகளுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சிப் பெறுபவர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 5, 2025

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அமைச்சர்!

image

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக இன்று செப்டம்பர் 5-ம் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் “கற்பது மட்டும் போதாது, கேட்பதும்,கேள்வி கேட்பதும் தான் முன்னேற்றம்” என கற்றுத் தந்த நம் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!