News December 21, 2024

சென்னையில் குடியேறுகிறாரா ராஷ்மிகா மந்தனா?

image

கீதாகோவிந்தம், வாரிசு, புஷ்பா போன்ற பல படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படும் அவர், கடந்த சில வாரங்களாக சென்னையில் உலா வருவதாக தெரிகிறது. சென்னையில் குடியேற அவர் திட்டமிட்டுள்ளதே இதற்கு காரணமெனக் கூறப்படுகிறது. சென்னை OMR பகுதியில் மிக ஆடம்பரமான அடுக்குமாடிக் குடியிருப்பை, அவர் வாங்கியிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

Similar News

News July 6, 2025

பெண்களின் கரங்களை வலுப்படுத்துவோம்: PM மோடி

image

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி என டிரினிடாட் & டொபாகோ பார்லிமென்ட்டில் PM மோடி பேசியுள்ளார். அவையில் பெண் MP-க்கள் அதிகமாக இருப்பதை பார்க்கும்போது பெருமையாக கருதுவதாகவும் கூறினார். இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கான மரியாதை ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும், நவீன இந்தியாவை உருவாக்க பெண்களின் கரங்களை வலுப்படுத்துகிறோம் என்றும் கூறினார். அடுத்த லோக்சபா தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வருகிறதோ?

News July 6, 2025

எடுத்த காரியத்தில் இருந்து பின்வாங்காதீர்கள்…

image

செய்தாக வேண்டும் என முடிவெடுத்து தொடங்கிய காரியத்தை பாதியில் நிறுத்துவது, நாமே தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம். செய்ய முடியும் என நினைத்தால், அதனை செய்வதற்கான வழியைத் தேடுங்கள். பாதியில் நிறுத்துவதற்கு முன், ஏன் – எதற்காக – எங்கிருந்து தொடங்கினோம் என்பதை ஒரு முறை நினைத்து பாருங்கள். முயற்சியை நீங்கள் கைவிடும் போது தான், வெற்றி உங்களைக் கைவிடும். நம்பிக்கையுடன் போராடுங்கள். வெற்றி நிச்சயம்!

News July 6, 2025

வரலாற்றில் முதல் முறை.. சரித்திரம் படைத்த கில் படை!

image

இந்திய அணி 2-வது டெஸ்டில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து 1014 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இந்திய அணி டெஸ்ட் மேட்ச் ஒன்றில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே. 1000 ரன்களை கடப்பதும் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக 2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் 916 ரன்களை அடித்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?

error: Content is protected !!