News March 24, 2024
விருதுநகர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

விருதுநகர் அருகே மூடியனுர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (21). இவர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் காரியாபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாண்டியன் நகர் பகுதியில் எதிரே வந்த காரின் மீது இருசக்கர வாகன மோதியதில் இளைஞர் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு.
Similar News
News December 25, 2025
விருதுநகர்: பள்ளிக்குள் பெண் ஆசிரியரை தாக்கிய EX மாணவர்

விருதுநகர் rr நகரை சேர்ந்தவர் அன்புச்செல்வி, 36. ஆவுடையாபுரம் அரசு பள்ளியில் இயற்பியல் ஆசிரியர். இவர் தன் வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு, சில நாட்களுக்கு முன், ‘கடந்தாண்டு 11th படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை போல இருக்கக் கூடாது’ என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதை அறிந்த அந்த முன்னாள் மாணவர், நேற்று வகுப்பறைக்குள் நுழைந்து, ஆசிரியையிடம் ஆபாசமாக பேசி, அவரை கடுமையாக தாக்கினார்.
News December 25, 2025
விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

ஜோகில்பட்டி ஊராட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.