News December 21, 2024
சுக்கிரன், சனி சேர்க்கை: கோடீஸ்வரராகும் 5 ராசிகள்

சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி அதிபதியாக சஞ்சாரம் செய்து வருகின்றார். இங்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு சுக்கிர பகவான் டிசம்பர் 28ம் தேதி பெயர்ச்சியாகி சேர உள்ளார். சனி – சுக்கிரனின் சேர்க்கை காரணமாக ரிஷபம், கடகம், துலாம், மகரம், கும்பம் ஆகிய 5 ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் நிறைந்த புத்தாண்டு தொடக்கமாக அமையப் போகிறது. திடீர் பண ஆதாயமும், கொடுத்த கடன் திரும்பவும் கிடைக்கும்.
Similar News
News July 6, 2025
பெண்களின் கரங்களை வலுப்படுத்துவோம்: PM மோடி

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி என டிரினிடாட் & டொபாகோ பார்லிமென்ட்டில் PM மோடி பேசியுள்ளார். அவையில் பெண் MP-க்கள் அதிகமாக இருப்பதை பார்க்கும்போது பெருமையாக கருதுவதாகவும் கூறினார். இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கான மரியாதை ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும், நவீன இந்தியாவை உருவாக்க பெண்களின் கரங்களை வலுப்படுத்துகிறோம் என்றும் கூறினார். அடுத்த லோக்சபா தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வருகிறதோ?
News July 6, 2025
எடுத்த காரியத்தில் இருந்து பின்வாங்காதீர்கள்…

செய்தாக வேண்டும் என முடிவெடுத்து தொடங்கிய காரியத்தை பாதியில் நிறுத்துவது, நாமே தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம். செய்ய முடியும் என நினைத்தால், அதனை செய்வதற்கான வழியைத் தேடுங்கள். பாதியில் நிறுத்துவதற்கு முன், ஏன் – எதற்காக – எங்கிருந்து தொடங்கினோம் என்பதை ஒரு முறை நினைத்து பாருங்கள். முயற்சியை நீங்கள் கைவிடும் போது தான், வெற்றி உங்களைக் கைவிடும். நம்பிக்கையுடன் போராடுங்கள். வெற்றி நிச்சயம்!
News July 6, 2025
வரலாற்றில் முதல் முறை.. சரித்திரம் படைத்த கில் படை!

இந்திய அணி 2-வது டெஸ்டில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து 1014 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இந்திய அணி டெஸ்ட் மேட்ச் ஒன்றில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே. 1000 ரன்களை கடப்பதும் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக 2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் 916 ரன்களை அடித்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?