News December 21, 2024
டிகிரி இல்லாமல் 6 இலக்க சம்பளம்; எப்படி சாத்தியம்?

டிகிரி இல்லாமல் இந்த துறையில் அதிக சம்பளம் சாத்தியம் என்கிறார் கூகுளின் VP லிசா கெவெல்பர். Data Analytics துறை அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளது. தகவல்களை புரிந்துகொண்டு அதை பிசினஸுக்கு தேவையான முடிவுகளாக வழங்கக் கூடியவர்களுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது என்கிறார். Grow with Google இந்த Skills பெற உதவுகிறது. இத்துறை அடுத்த 10 ஆண்டுகளில் 30% அளவுக்கு வளரும் எனக் கணிக்கப்படுகிறது.
Similar News
News July 6, 2025
பெண்களின் கரங்களை வலுப்படுத்துவோம்: PM மோடி

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி என டிரினிடாட் & டொபாகோ பார்லிமென்ட்டில் PM மோடி பேசியுள்ளார். அவையில் பெண் MP-க்கள் அதிகமாக இருப்பதை பார்க்கும்போது பெருமையாக கருதுவதாகவும் கூறினார். இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கான மரியாதை ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும், நவீன இந்தியாவை உருவாக்க பெண்களின் கரங்களை வலுப்படுத்துகிறோம் என்றும் கூறினார். அடுத்த லோக்சபா தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வருகிறதோ?
News July 6, 2025
எடுத்த காரியத்தில் இருந்து பின்வாங்காதீர்கள்…

செய்தாக வேண்டும் என முடிவெடுத்து தொடங்கிய காரியத்தை பாதியில் நிறுத்துவது, நாமே தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம். செய்ய முடியும் என நினைத்தால், அதனை செய்வதற்கான வழியைத் தேடுங்கள். பாதியில் நிறுத்துவதற்கு முன், ஏன் – எதற்காக – எங்கிருந்து தொடங்கினோம் என்பதை ஒரு முறை நினைத்து பாருங்கள். முயற்சியை நீங்கள் கைவிடும் போது தான், வெற்றி உங்களைக் கைவிடும். நம்பிக்கையுடன் போராடுங்கள். வெற்றி நிச்சயம்!
News July 6, 2025
வரலாற்றில் முதல் முறை.. சரித்திரம் படைத்த கில் படை!

இந்திய அணி 2-வது டெஸ்டில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து 1014 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இந்திய அணி டெஸ்ட் மேட்ச் ஒன்றில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே. 1000 ரன்களை கடப்பதும் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக 2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் 916 ரன்களை அடித்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?