News December 21, 2024

CM பேச்சு காயப்படுத்தியது: அல்லு அர்ஜுன்

image

தெலங்கானா முதல்வரின் கருத்துக்கள் தன்னை காயப்படுத்தியதாக அல்லு அர்ஜுன் வருந்தியுள்ளார். ரோடு ஷோ நடத்தியதாக கூறுவது சரியல்ல எனவும், அனுமதியின்றி சென்றதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அரசுடன் எவ்வித சர்ச்சையையும் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக, கூட்ட நெரிசலில் பெண் பலியானதற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என ரேவந்த் குற்றஞ்சாட்டியிருந்தார்.

Similar News

News July 6, 2025

₹8,000 கோடியில் புதிய கன்டெய்னர் துறைமுகம்

image

சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் 2 கிமீ தூரத்துக்கு புதிய கன்டெய்னர் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடந்து வருவதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார். இது ₹8,000 கோடியில் அமைக்கப்படவுள்ளது என்றும், சரக்கு வாகனங்கள் நிறுத்தம், கப்பல் பழுதுபார்ப்பு நிலையம் உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாகவும் கூறினார். இதன்மூலம் கூடுதலாக சரக்குகளைக் கையாள முடியும் என்றார்.

News July 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 388 ▶குறள்: முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். ▶பொருள்: நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.

News July 6, 2025

ஹீரோவாகும் இயக்குநர்கள்.. ரசிகர்கள் கவலை..!

image

பார்த்திபன், சேரன், சுந்தர் சி, சசிகுமார் என தமிழ் சினிமா இயக்குநர்கள் ஹீரோவாவது புதிய விசயமல்ல. ஆனால் நல்ல திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்த அவர்கள் அதன்பிறகு இயக்கத்தில் பெரிய வெற்றி பெறவில்லை. நடிகர்களாகிவிட்ட பின் மீண்டும் அவர்களிடமிருந்து அப்படிப்பட்ட படங்கள் எப்போது வரும் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சேரன், GVM, சசிகுமார் உள்ளிட்ட இயக்குநர்களை ரொம்ப மிஸ் பண்றோம் இல்லையா?

error: Content is protected !!