News December 21, 2024
பிரேசிலில் டிரக் மீது பேருந்து மோதி விபத்து: 22 பேர் பலி

பிரேசிலில் டிரக் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் அப்பாவி பயணிகள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சா பாலோ நகரில் இருந்து 45 பேருடன் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. மினஸ் கெரியாஸ் என்னுமிடத்தில் நெடுஞ்சாலையில் வந்தபோது, டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 13 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News July 6, 2025
மீன்களின் விலை குறைவு.. அலைமோதும் மக்கள் கூட்டம்!

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் குவிகிறது. சென்னை காசிமேடு, தூத்துக்குடி, நாகை மீன்பிடி துறைமுகங்களில் மீன்கள் விற்பனை அமோகமாக உள்ளது. சென்னையில் மீன்கள் விலை குறைந்து 1 கிலோ நெத்திலி- ₹150, சீலா- ₹350, இறால்- ₹300, சங்கரா மீன்- ₹150, மத்தி- ₹100, வஞ்சிரம்- ₹700, நண்டு- ₹150, வாவல் மீன்- ₹500-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் நாகையில் மீன்கள் விலை சற்று அதிகரித்துள்ளது.
News July 6, 2025
பெண்களின் கரங்களை வலுப்படுத்துவோம்: PM மோடி

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி என டிரினிடாட் & டொபாகோ பார்லிமென்ட்டில் PM மோடி பேசியுள்ளார். அவையில் பெண் MP-க்கள் அதிகமாக இருப்பதை பார்க்கும்போது பெருமையாக கருதுவதாகவும் கூறினார். இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கான மரியாதை ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும், நவீன இந்தியாவை உருவாக்க பெண்களின் கரங்களை வலுப்படுத்துகிறோம் என்றும் கூறினார். அடுத்த லோக்சபா தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வருகிறதோ?
News July 6, 2025
எடுத்த காரியத்தில் இருந்து பின்வாங்காதீர்கள்…

செய்தாக வேண்டும் என முடிவெடுத்து தொடங்கிய காரியத்தை பாதியில் நிறுத்துவது, நாமே தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம். செய்ய முடியும் என நினைத்தால், அதனை செய்வதற்கான வழியைத் தேடுங்கள். பாதியில் நிறுத்துவதற்கு முன், ஏன் – எதற்காக – எங்கிருந்து தொடங்கினோம் என்பதை ஒரு முறை நினைத்து பாருங்கள். முயற்சியை நீங்கள் கைவிடும் போது தான், வெற்றி உங்களைக் கைவிடும். நம்பிக்கையுடன் போராடுங்கள். வெற்றி நிச்சயம்!