News December 21, 2024

எம்.பிக்கள் மீது தாக்குதல்: ராகுலை விசாரிக்க சிறப்புக்குழு

image

பாஜக எம்.பி.க்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், ராகுலை விசாரிக்க டெல்லி போலீசார் சிறப்புக்குழுவை அமைத்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக எம்.பி.க்களை ராகுல் கீழே தள்ளிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சபாநாயகரின் அனுமதி கிடைத்ததும், ராகுலுக்கு சம்மன் அனுப்பி, சிறப்புக்குழுவினர் விசாரிக்க உள்ளனர்.

Similar News

News March 10, 2026

Uber, Ola, Rapido-க்கு தடை!

image

மகாராஷ்டிராவில் Ola, Uber, Rapido ஆகியவற்றின் பைக் டாக்சி சேவைகளுக்கான தற்காலிக லைசென்ஸ்களை அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. அம்மாநிலத்தில் இந்த நிறுவனங்கள் E-bike டாக்சிகளை மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் லைசென்ஸ் பெற்றுவிட்டு, இந்நிறுவனங்கள் E-bike களுக்கு பதிலாக பெட்ரோல் பைக்குகளை இயக்கியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

News March 10, 2026

த்ரிஷாவின் குற்றச்சாட்டு 100% பொய்: பார்த்திபன்

image

<<19332195>>தனது பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்<<>> தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக வீடியோ வெளியிட்டுள்ளார் பார்த்திபன். குற்றம் சுமத்துகிற மாதிரி த்ரிஷாவின் போட்டோவை போட்டு தான் பேச ஆசைப்பட்டதாக கூறுவது 100% பொய்; யாரிடமும் காசு வாங்கிவிட்டு அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு போகவில்லை என்றார். தொகுப்பாளர் ‘குந்தவை’ என கூறியதும், அது ஒரு வார்த்தை ஜாலமாக தோன்றியதால் தான் அப்படி பேசியதாகவும் கூறியுள்ளார்.

News March 10, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கண் அழியாமை ▶குறள் எண்: 628 ▶குறள்: இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். ▶பொருள்: இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

error: Content is protected !!