News December 21, 2024
ரயில்வேயில் வேலை பார்க்க ரெடியா?

ரயில்வேயில் 1,036 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. PG ஆசிரியர்கள், சயின்டிபிக் சூப்பர்வைசர்ஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி ரயில்வே ஆட்தேர்வு இணையதளத்தில் தொடங்கவுள்ளது. அந்த வேலைக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தகவலை பகிருங்கள்.
Similar News
News March 11, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கண் அழியாமை ▶குறள் எண்: 629 ▶குறள்: இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். ▶பொருள்: இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.
News March 11, 2026
நம் குடும்பத்தை பிரித்தது திமுக தான்: அன்புமணி

கடந்த 6 மாதமாக நடப்பதை எல்லாம் தன்னால் வெளியே சொல்ல முடியாது என அன்புமணி வேதனையுடன் தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் பேசிய அவர், நன்றாக இருந்த குடும்பத்தை பிரித்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததற்கு காரணமே கேடுகெட்ட திமுக தான் என்றார். பாமக என்ற நம் குடும்பத்திற்குள் திமுக குழப்பத்தை ஏற்படுத்தியது; வரும் தேர்தலில் உங்கள் கோபத்தை எல்லாம் இந்த தீயசக்தி திமுக மீது காண்பியுங்கள் எனவும் கூறியுள்ளார்.
News March 11, 2026
சிலிண்டர் தட்டுப்பாட்டால் இணைய சேவை பாதிப்பா?

சிலிண்டர் பற்றாக்குறையால் மொபைல் மற்றும் இணைய சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது செல்போன் டவர்கள் துருப்பிடிப்பதை தடுக்க அவற்றின் உற்பத்தியின் போது பயன்படுத்தப்படும் துத்தநாகத்தின் பாதுகாப்பு அடுக்குக்கு எல்பிஜி/எல்என்ஜி தேவைப்படுகிறது. தற்போது அவை கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால், இது நெட்வொர்க் விரிவாக்கத்தை தாமதப்படுத்தும் & இணைய சேவையை பாதிக்கும் என்கின்றனர்.


