News March 24, 2024
முறையான ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

உத்தமபாளையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே இன்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிடிஓ நாகராஜ் மற்றும் காவல்துறை ஒருங்கிணைந்து வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட காரை சோதனையிட்டதில் அதில் ரூ.70000 உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக பணத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையம் சார்நிலை கருவூல அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News December 26, 2025
தேனியில் கணவரை கொலை செய்த மனைவி!

பல்லவராயன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மர் (57). இவருடைய மனைவி சந்திரா (54). இவர்களது மகன் அஜித் (27). தர்மர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு தர்மர் வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவியும், மகனும் கட்டையால் தர்மரை தாக்கி கொலை செய்தனர். கோம்பை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
News December 25, 2025
தேனி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப சுலபம்..

தேனியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது <
News December 25, 2025
தேனி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

தேனி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546 – 255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.


