News December 21, 2024
நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் காங்கிரஸ்

மத்திய அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து தெரிவித்த கருத்தை கண்டித்து வரும் 24 ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பாபாசாகேப் அம்பேத்கர் சம்மான் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டன பேரணி நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 5, 2025
மின்னல் வேக இணைய சேவைக்காக சோதனை

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் அதிவேக செயற்கைக்கோள் இணைய சோதனைகளை நடத்த, தொலைத்தொடர்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது. 6 மாதங்களுக்கு சோதனை நடத்திக்கொள்ள இப்போது அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 10 இடங்களில் ஸ்டார்லிங்கின் மையங்கள் அமைக்கப்பட்டு, மும்பை தலைமையகமாக செயல்படுமாம். சோதனை முயற்சி வெற்றி பெற்றால் இந்தியாவின் இணை சேவை அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 5, 2025
மிலாடி நபி என்றால் என்ன?

இறை தூதர் முகமது நபிகளின் பிறந்தநாளை தான் உலகம் முழுவதிலும் உள்ள மிலாடி நபியாக கொண்டாடுகின்றனர். மிலாடி நபி திருநாளை, மிலாத் உன் நபி என்றும் இஸ்லாமியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில், அவரின் வாழ்க்கை, போதனைகள், நல்லொழுக்கம் ஆகியவற்றை நினைவுகூர்ந்து, தொழுகை செய்து, நல்ல செயல்களைச் செய்கிறார்கள். அன்பும் அமைதியும் பரப்பும் நாள் என்பதால், இது மிகுந்த புனிதமாகக் கருதப்படுகிறது. SHARE IT.
News September 5, 2025
அதிமுக ஒன்றுபட்டால் நல்லது: பிரேமலதா ஆதரவு

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதுபோல், அதிமுக ஒன்றிணைந்தால் நல்லதுதான் என பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். அதேநேரம், இவ்விவகாரத்தில் அந்த கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதேபோல், NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும், GK வாசனும், அதிமுக மீண்டும் ஒன்றிணைவது வரவேற்கத்தக்கது என செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?