News December 21, 2024
மகாலட்சுமிக்காக மஞ்சு வாரியர் நன்றி

‘விடுதலை 2’ பட ஷூட்டிங் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, ‘மகாலட்சுமி’ கேரக்டர் வழங்கியதற்காக வெற்றிமாறனுக்கு மஞ்சு வாரியர் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று வெளியான இப்படம், கம்யூனிசம், திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய சிந்தாந்தங்களை பற்றி விரிவாக பேசுகிறது. சமகாலத்தில் பேச வேண்டிய அரசியல் என ஒரு தரப்பு ரசிகர்களும், அரசியல் ஓவர்டோஸ் ஆனதாக மற்றொரு தரப்பு ரசிகர்களும் கூறிவருகின்றனர்.
Similar News
News July 6, 2025
விஜய்க்கு பதிலடி கொடுத்த நேரு

திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என விஜய்யின் பேச்சுக்கு அமைச்சர் நேரு பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாங்கள் விஜய்யை கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே என பதிலடி கொடுத்தார். இந்த செய்தி வெளியான உடன், அரசியலில் எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை; 2026 தேர்தலுக்கு பிறகு என்ன வேண்டுமானாலும் (திமுக – தவெக கூட்டணி) நடக்கலாம் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News July 6, 2025
அமெரிக்க சுதந்திரத்தை மீட்க… கட்சி ஆரம்பித்த மஸ்க்!

அதிபர் டிரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க் ‘அமெரிக்கா கட்சி’ (America Party) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். அமெரிக்கர்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதே இந்தக் கட்சியின் நோக்கம் என மஸ்க் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
News July 6, 2025
ஞாயிற்றுக்கிழமையில் இதை செய்தால்.. தீராத கடனும் தீரும்!

சூரியன் உதிக்கும் முன்பே குளித்து, பூஜைக்கு தயாராக வேண்டும். அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் போன்றவற்றை வைத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். பிறகு ஒரு இனிப்பு வகையை சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் சாப்பாட்டை தவிர்த்து மாலையில் விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில், வீட்டில் பிரச்னைகள் குறைந்து, செல்வம் பெருகி, தீராத கடனும் தீரும்.