News December 21, 2024

ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் பலி

image

வடவாம்பலம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தீபலோகேஷ் (7). இவர், வளவனுாரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் பள்ளி முடிந்ததும், வழக்கம்போல் தீபலோகேஷ் உள்ளிட்டோர் சந்திரமோகன் (56) என்பவரின் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது, விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்ததால், ஆட்டோ கவிழ்ந்தது. அதில் தீபலோகேஷ் சம்பவ இடத்திலே இறந்தார்.

Similar News

News March 8, 2026

விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று மார்ச் (07) இரவு 10 மணி முதல் இன்று மார்ச்- (08) காலை 6 மணி வரைரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News March 7, 2026

விழுப்புரத்தில் சம்பளப் பிரச்னையா?

image

விழுப்புரம் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <>லிங்கிலோ <<>>(அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

News March 7, 2026

விழுப்புரத்தில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<> eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!