News December 21, 2024
7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 27ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
Similar News
News March 6, 2026
6G சேவை.. பின்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம்

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா-பின்லாந்து இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குடியேற்ற ஒத்துழைப்பு, சுற்றுச்சுழல், புள்ளிவிபரத் துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் PM மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம், இந்தியா-பின்லாந்து இடையே AI, 6ஜி தொலைத்தொடர்பு, எரிசக்தி, குவாண்டம் கம்ப்யூட்டிங் துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும்.
News March 6, 2026
₹6,769 கோடி வருவாய் ஈட்டிய பாஜக

2024-25 நிதியாண்டில் நன்கொடை மூலம் பாஜக ₹6,769 கோடி வருமானம் ஈட்டியதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம்(ADR) கூறியுள்ளது. 6 தேசிய கட்சிகள் சுமார் ₹7,960 கோடி பெற்ற நிலையில், அதில் பாஜகவிற்கு 85% நன்கொடை கிடைத்துள்ளது. காங்கிரஸ் ₹918 கோடி நன்கொடை பெற்றுள்ளது. வருவாயில் ₹3,774 கோடியை பாஜக செலவழித்துள்ளது. காங்கிரஸ் வருவாயை தவிர்த்து கூடுதலாக ₹193.66 கோடி என மொத்தம் ₹1111.94 கோடி செலவழித்துள்ளது.
News March 6, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 6, மாசி 22 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்


