News December 21, 2024
கள்ளக்குறிச்சியில் தாஜ்மஹால் கண்காட்சி

கள்ளக்குறிச்சியில் இன்று மாலை 6:00 மணி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹால் டிஸ்னி லேண்ட் வண்ண மலர் கண்காட்சிகளுடன் நடைபெற உள்ளது. அரையாண்டு விடுமுறை தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ள நிலையில், தற்போது இந்த கண்காட்சி முகாம் கள்ளக்குறிச்சி நடைபெறுவது பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
Similar News
News September 12, 2025
கள்ளக்குறிச்சி: கடத்தலுக்கு உடந்தையான போலீஸ் மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணிபுரிந்த செல்வகுமார், வாணியங்குப்பம் கெடிலம் ஆற்றில் நடந்த மணல் கடத்தலைத் தடுக்கத் தவறியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மணல் கடத்தலுக்கு அவர் உடந்தையாக இருந்தது குறித்து எஸ்.பி. மாதவன் நடத்திய விசாரணையில் இது உறுதியானது. இதனையடுத்து, செல்வகுமாரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. நேற்று உத்தரவிட்டுள்ளார்.
News September 12, 2025
கள்ளக்குறிச்சி: 8ஆம் வகுப்பு போதும்! நல்ல சம்பளத்தில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள எழுத்தர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு ஏற்ப 8 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியின் அடிப்படையில் ரூ.15,700 – ரூ.Rs.71,900 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100. விருப்பமுடையவர்கள் வரும் செப்.30க்குள் இந்த <
News September 12, 2025
கள்ளக்குறிச்சி: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

கள்ளக்குறிச்சி மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE IT