News March 24, 2024

முதல்வர் பிரச்சாரம் பணிகள் துவக்கம்

image

எட்டையாபுரம் அருகே சிந்தலக்கரையில் வைத்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் வரும் 26 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று தூத்துக்குடி , ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக பந்தல் அமைக்கும் பணி வாகன நிறுத்துமிடம், குடிநீர்,கழிவறை போன்ற வசதிகள் செய்வதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது

Similar News

News September 8, 2025

தூத்துக்குடி: தபால் சேவை தொடங்க விண்ணப்பிக்கலாம்

image

தூத்துக்குடி கோட்டத்தில் தபால் தலைகள் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், மணியாடர் ஆகியோவற்றை பதிவு செய்தல் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இதற்கு தேவையான இடம் வைத்துள்ளவர்கள் https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Franchise-Scheme.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.

News September 8, 2025

தூத்துக்குடி: சான்றிதழ் தொலைந்தால் என்ன செய்யலாம்?

image

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. தேவையுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 8, 2025

தூத்துக்குடி விவசாயிகள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் அரசு மானிய விலையில் பம்பு செட்டுகள் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மின்னிணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகள் 15 குதிரை திறன் வரையிலான பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!