News December 21, 2024

‘மனம் விட்டு பேசுங்கள்’ ஜெயம் ரவி, ஆர்த்திக்கு அறிவுரை

image

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். விசாரணைக்கு ஆஜரான மத்தியஸ்தர், வழக்கில் சமரச பேச்சுவார்த்தை முடியவில்லை என கருத்து தெரிவித்தார். இதையடுத்து, தம்பதி இருவரும் மனம் விட்டு பேச அறிவுறுத்திய நீதிமன்றம், வழக்கை ஜன.18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Similar News

News September 5, 2025

அதிமுக ஒன்றுபட்டால் நல்லது: பிரேமலதா ஆதரவு

image

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதுபோல், அதிமுக ஒன்றிணைந்தால் நல்லதுதான் என பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். அதேநேரம், இவ்விவகாரத்தில் அந்த கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதேபோல், NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும், GK வாசனும், அதிமுக மீண்டும் ஒன்றிணைவது வரவேற்கத்தக்கது என செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

News September 5, 2025

EXCLUSIVE: அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கம் ஏன்?

image

<<17618756>>2009-ல் EPS-ஐ <<>>கட்சி பொறுப்பிலிருந்து ஜெயலலிதா நீக்கியதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இதற்கான காரணத்தை விசாரித்த போது, பொய் புகார் ஒன்றில் ஜெயலலிதா அவரை நீக்கியதாகவும், பிறகு உண்மை தெரிந்த உடன் 10 நாட்களில் மீண்டும் இணைத்துக் கொண்டதாகவும் ADMK செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் மீது பல புகார்கள் இருப்பதால் அவர் இதைபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

News September 5, 2025

வெள்ளி பதக்கத்துடன் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது

image

சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், 386 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை DCM உதயநிதி வழங்கினார். இதில் விருது பெறுபவர்களுக்கு ₹10,000 ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதிக மாணவர் சேர்க்கை, கற்பித்தலில் புதுமை, பள்ளிகளின் நலன் சார்ந்து சிறந்த பங்களிப்பை வழங்குதல் உள்ளிட்டவை விருதுக்கான அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!