News December 21, 2024
ராபின் உத்தப்பாவுக்கு எதிராக பிடிவாரண்ட்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் இயக்குனராக உள்ள நிறுவனத்தில், ஊழியர்களின் PF கணக்கில் ₹23 லட்சத்தை டெபாசிட் செய்யாமல் மோசடி செய்ததாக ஓய்வூதிய நிதி ஆணையர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
Similar News
News March 27, 2026
அதிமுகவில் இணைந்தார்.. ஸ்டாலின் அதிர்ச்சி

தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துவரும் நிலையில், முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், OPS ஆதரவாளரும், கிருஷ்ணகிரி Ex MLA-வுமான கோவிந்தராஜ், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது திமுகவில் இணைந்துள்ள OPS மூலம், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இணைக்க எண்ணியிருந்த ஸ்டாலினுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
News March 27, 2026
IPL டீம் கேப்டன்களின் பரிதாப நிலை!

உலகின் தலைசிறந்த வீரர்களை உள்ளடக்கிய IPL டீம் கேப்டன்களை கவனியுங்க. 10-ல் 7 பேருக்கு இந்திய T20I அணியில் இடமே இல்லை. CSK கேப்டன் ருதுராஜ், RCB கேப்டன் படிதர், PBKS கேப்டன் ஷ்ரேயஸ், GT கேப்டன் கில், KKR கேப்டன் ரஹானே, RR கேப்டன் பராக், LSG கேப்டன் பண்ட் ஆகியோர் சிறந்த T20 வீரர்கள் இல்லை என BCCI கருதுகிறதா? அல்லது வேறெதும் காரணம் உள்ளதா? என்ற விவாதம் SM-ல் தொடங்கியுள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
News March 27, 2026
இந்தியாவுக்கு பக்கத்தில் இன்னொரு போர் வெடித்தது

ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் போரை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது. இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ஆப்கனின் எல்லையில் PAK குண்டுகளை வீசியதில் இருவர் உயிரிழந்ததோடு, 8 அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆப்கன்தான் முதலில் தாக்குதலை தொடங்கியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.


