News December 21, 2024
இதையும் விட்டு வைக்காத அம்பானி

ரிலையன்ஸ் கால் வைக்காத துறையே இந்தியாவில் இல்லை எனலாம். விளையாட்டும் அதில் விதிவிலக்கல்ல. பணம் கொழிக்கும் ஐபிஎல், ஐசிஎல் அணிகளை வைத்துள்ள ரிலையன்ஸ், அடுத்து MMA-விலும் கால்பதிக்கப் போகிறது. அந்த வகையில் அதிக வியூவர்ஸ் கொண்ட இந்த விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில், முன்னாள் உலக சாம்பியன் கானர் மெக்ரீகர்- யூடியூபர் லோகன் பால் மோதும் போட்டியை இந்தியாவில் நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News July 5, 2025
இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் டார்கெட்

2-வது டெஸ்டில் 427 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர் செய்துள்ளது. 2-வது இன்னிங்சில் ராகுல்(55), ரிஷப் பண்ட்(65), ஜடேஜா(69) அரைசதம் அடித்தனர். கேப்டன் கில்(161) சதம் அடித்து அணிக்கு தூணாக நின்றார். இதனால் இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை இந்திய அணியால் நிர்ணயிக்க முடிந்தது. இந்திய அணியின் பந்து வீச்சும் பேட்டிங்கை போல் அதிரடியாக இருந்தால் வெற்றி நமதே.
News July 5, 2025
PM KISAN: வங்கி கணக்கில் ₹2000 எப்போது?

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பு PM KISAN திட்ட தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்பதுதான். ஜூனில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், ஜூலை 18 அன்று பிஹாரின் மோட்டிஹரி பகுதியில் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், பண வரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
News July 5, 2025
கண் பார்வைக்கு கேரட்டை விட இது பெஸ்ட்

கண் பார்வைக்கு இந்த 5 உணவுகளை நீங்கள் உணவில் சேர்ந்தால் போதும் மக்களே. *எல்லா வகையான கீரைகளும் கண்ணுக்கு நல்லது *மத்தி உள்ளிட்ட கொழுப்பு அதிகமுள்ள மீன்களை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும் *நட்ஸ் பார்வையை மேம்படுத்த உதவும் *கட்டாயம் உங்கள் உணவில் முட்டையை சேர்க்க வேண்டும் *ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் கொண்ட உணவுகள் கண்ணுக்கு சிறந்தது. நல்லா சாப்பிடுங்க கண் பத்திரம்…