News December 21, 2024

2024ல் ஒபாமா ஃபேவரிட் லிஸ்ட்டில் தென்னிந்திய படம்

image

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா 2024ன் சிறந்த படங்களாக பரிந்துரைத்துள்ள 10 படங்களில் ஒரு இந்திய படம், குறிப்பாக தென்னிந்திய படம் இடம்பெற்றுள்ளது. சர்வதேச தயாரிப்பில் பாயல் கபாடியா இயக்கிய All We Imagine As Light படம் தான் அது. 77வது கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த இயக்குநர் விருதுகளை வென்றுள்ளது.

Similar News

News March 10, 2026

இலங்கை அணியின் கோச் ஆனார் கேரி கிர்ஸ்டன்

image

டி20 WC தொடரில் இலங்கை அணியின் படுதோல்வியை அடுத்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகினார். இதையடுத்து அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு 2011 இல் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேரி கிர்ஸ்டன், 2 ஆண்டுகாலத்திற்கு வரும் ஏப்ரல் 14, 2028 வரை தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

News March 10, 2026

தனிமையில் இருப்பதால் இத்தனை நோய்கள் வருமா?

image

சிலர் எப்போது பார்த்தாலும் தனிமையிலேயே இருப்பார்கள். என்றைக்காவது தனியாக இருந்தால் பிரச்னை கிடையாது. ஆனால், நண்பர்கள், குடும்பத்தினர், பொழுதுபோக்கு என எதற்கும் நேரம் செலவிடாமல் எப்போதுமே தனிமையிலேயே இருப்பது, இதய நோய், ஸ்ட்ரோக், சர்க்கரை போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதாக கேம்பிரிட்ஜ் பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. நரம்பு அமைப்பு & ஹார்மோன் சமநிலையை பாதிப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படுகிறதாம்.

News March 10, 2026

அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்: அமீர்

image

விஜய்யின் அரசியல் வருகையை அடுத்து அவரை <<19318052>>அமீர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.<<>> இந்நிலையில் கரூர் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு CBI சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், ‘CBI விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிராதீங்க; அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்’ என விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் வெளியான அமீரின் பதிவு SM-ல் கவனம் பெற்றுள்ளது.

error: Content is protected !!