News March 24, 2024
சேலம்: சுவாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம்
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகையில்
உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கோவிலில் சுவாமியை வணங்கி அங்குள்ள பொது மக்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பெரியசோரகை ஊர் பொதுமக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Similar News
News February 7, 2026
சேலத்தில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)
News February 7, 2026
சேலம்: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

சேலம் மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க அதிகம் ஷேர் பண்ணுங்க!
News February 7, 2026
சேலம் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

சேலம் முழுவதும் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினந்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பிப்ரவரி 06 அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும்


