News March 24, 2024

காஞ்சிபுரம் அருகே சோகம்

image

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் (45). இவர் ஶ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தார். நேற்று பணியில் இருந்த முத்துக்குமரன் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் சாலை இணையும் கூட்டு சாலையில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது லாரி மோதியதில் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News October 27, 2025

காஞ்சி: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (அக்.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 26, 2025

காஞ்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நாளை (அக்.27) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்களது கோரிக்கைளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 26, 2025

காஞ்சிபுரம்: B.E / B.Tech / B.Sc முடித்தவர்களா? ரூ.1,40,000 சம்பளம்

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்திருந்தது 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-14ஆம் தேதிக்குள்ள இந்த <>லிங்கில் விண்ணப்பிக்கலாம்<<>>

error: Content is protected !!