News December 21, 2024
குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க…

குளிர்காலத்தில் சூடாக, நாள் முழுக்க உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கும் உணவுகளை முக்கியமானதாகிறது. அப்படியான சில உணவுகளின் லிஸ்ட் இது. * எள் விதைகள் – உடலுக்கு சூடு கொடுக்கும் * மஞ்சள் – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் * தேன் – பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது * இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு – உடலில் வெப்பத்தை கொடுக்கும் * ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், பேரிச்சம் பழம் – அதீத சூட்டை குறைக்கும்.
Similar News
News March 3, 2026
மீண்டும் எம்பி ஆகிறாரா தம்பிதுரை?

அதிமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக மீண்டும் தம்பிதுரை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா சீட்டுகளில் 2 இடங்கள் அதிமுகவிற்கு கிடைக்கும். இதில் ஒரு ராஜ்யசபா சீட்டை கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு (அன்புமணி) கொடுக்கவும், மற்றொன்றில் தம்பிதுரையை களமிறக்கவும் EPS திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News March 3, 2026
ஈரான் அரசு என்னை கொன்னுடும்.. பயத்தில் நடிகை!

பிரபல ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசி, ஈரான் அரசாங்கம் தன்னை கொன்றுவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். கமேனி மரணமடைந்ததை கொண்டாடிய அவர், அந்நாட்டின் அரசு கவிழும் வரை அங்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். ஈரானில் பிறந்த நோரூசி, 8 வயதில் வெளியேறி ஜெர்மனியில் தஞ்சமடைந்தார். தற்போது இந்தியாவில் வசித்து வரும் அவர், ‘Sacred Games’ உள்பட பல இந்திய மொழி படங்கள், வெப் தொடர்களில் நடித்துள்ளார்.
News March 3, 2026
கேவலம்: சஞ்சுவுக்கு எதிராக இனவெறி கருத்து!

WI அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்திய அணியை சஞ்சு சாம்சன் கரைசேர்த்தார். அவரை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வரும் நிலையில், X தளத்தில், கருப்பானவரால் தான், கருப்பினத்தவர்களை வீழ்த்த முடியும் என மிகவும் கேவலமான ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்திய ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக கண்டித்த நிலையில், அப்பதிவு தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளது. இவர்களையெல்லாம் என்ன செய்வது?


