News December 21, 2024
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை ₹420 உயர்வு

2025ம் ஆண்டு சீசன் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. PM மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில், சாதாரண கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவின்டாலுக்கு ₹420 உயர்த்தி, ₹11,582 ஆகவும், முழு கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ₹100 உயர்த்தி ₹12,100 வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 4, 2025
தோனி குறித்த பேச்சு.. மெளனம் கலைத்த இர்ஃபான் பதான்

ஒருவரின் (தோனி) அறையில், அவரை மகிழ்விக்க ஹூக்காவை வைக்கும் நபர் நான் அல்ல என்று இர்ஃபான் பதான் கூறிய பழைய வீடியோ வைரலாகி விவாதத்தை கிளப்பியது. தோனி, தனக்கு பிடித்தவர்களையே பிளேயிங் 11-ல் விளையாட வைப்பார் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், 5 ஆண்டுகள் பழமையான ஒரு திரிக்கப்பட்ட வீடியோ வெளிவந்துள்ளதாக பதான் கூறியுள்ளார். இது ரசிகர்களின் போரா (அ) பப்ளிசிட்டியா என்றும் கேட்டுள்ளார்.
News September 4, 2025
இஸ்லாம் இந்தியாவில் நிலைத்திருக்கும்: RSS

இஸ்லாம் இந்தியாவிற்குள் வந்தது முதல், அது இங்கேயே இருக்கிறது, இங்கேயே இருக்கும் என RSS தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். RSS நூற்றாண்டு நாளையொட்டி நடந்த நிகழ்வில் பேசிய அவர், இஸ்லாம் இந்தியாவில் நிலைத்திருக்கும் என உறுதிபட தெரிவித்தார். பரஸ்பர நம்பிக்கை மட்டுமே மோதல்களை தீர்க்க முடியும் என்ற அவர், நாம் அனைவரும் ஒன்று என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
News September 4, 2025
செப்டம்பர் 4: வரலாற்றில் இன்று

*1825 – தாதாபாய் நெளரோஜி பிறந்தநாள்.
*1888 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், தான் கண்டுபிடித்த படம்பிடிக்கும் கருவிக்கு ‘ஈஸ்ட்மேன் கோடாக்’ என்பதை வர்த்தகக் குறியீடாகக் காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
*1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் மீதான போரில் இருந்து பின்லாந்து விலகியது.
*1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2007 – தமிழ் திரைப்பட நடிகை குமாரி ருக்மணி நினைவுநாள்.