News December 21, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பதிவு நிலவரம்

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக பொன்னேரியில் 30மி.மீ, கும்மிடிப்பூண்டி 24 மி.மீ, சோழவரத்தில் 10மி.மீ, செங்குன்றத்தில் 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
Similar News
News September 11, 2025
திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (செப் 12) அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
News September 10, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (10.09.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நிலை அல்லது பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள் ஏற்பட்டால், தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரோந்து அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
News September 10, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.