News December 21, 2024

PM மோடி இன்று குவைத் பயணம்

image

PM மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று குவைத் நாட்டிற்கு செல்கிறார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து மரியாதை அளிக்கப்பட உள்ளது. இந்த பயணத்தில், இரு நாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ள அவர், அங்குள்ள இந்திய தொழிலாளர்களையும் சந்தித்து பேச உள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் குவைத் பயணிக்கும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

Similar News

News September 4, 2025

நக்சல் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது: அமித்ஷா

image

இந்தியாவில் நக்சல்களை ஒழிக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமித்ஷா, 2026, மார்ச் 31-க்குள் நக்சல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என சூளுரைத்தார். மேலும் நக்சல் பயங்கரவாதிகள் சரணடையும் வரை (அ) கைதாகும் வரை (அ) ஒழிக்கப்படும் வரை PM மோடி தலைமையிலான அரசு ஓயாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

News September 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 448 ▶குறள்: இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். ▶ பொருள்: குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.

News September 4, 2025

சோனியா காந்தி பற்றி மோடி அவதூறாக பேசினார்: தேஜஸ்வி

image

யாருடைய தாயாரையும் அவதூறாக பேசக்கூடாது என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். PM மோடியின் தாயார் பற்றி காங்., கட்சியினர் அவதூறாக பேசியதற்கு எதிராக இன்று NDA கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, சோனியா காந்தி குறித்து மோடி அவதூறாக பேசியதாகவும், நிதிஷ் குமாரின் DNA பற்றி கேள்வி எழுப்பியதாகவும் கூறி சாடியுள்ளார். இது தற்போது விவாதமாகியுள்ளது.

error: Content is protected !!