News December 21, 2024

இந்தியா – பாக். சாம்பியன்ஸ் ட்ராபி மேட்ச் தேதி குறிச்சாச்சு?

image

2025ல் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் ட்ராபி மீது இருக்கும் எதிர்பார்ப்பை விட, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் எப்போதும் மோதப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு அதிகளவில் உள்ளது. இதற்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டதாக தெரிய வந்துள்ளது. அதாவது பிப்ரவரி 23, 2025 இப்போட்டி நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்போட்டி துபாயில் அல்லது இலங்கையின் கொழும்பில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News September 4, 2025

GST குறைப்புக்கு பிஹார் தேர்தல் காரணமா? ப.சிதம்பரம்

image

தற்போது அறிவித்துள்ள GST சீர்திருத்தங்கள் 8 ஆண்டுகள் தாமதமானது என்று ப.சிதம்பரம் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட X பதிவில், இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என சிலவற்றை பட்டியலிட்டுள்ளார். நாட்டின் மந்தமான வளர்ச்சியா? அதிகரிக்கும் வீட்டுக்கடனா? குறைந்துவரும் வீட்டு சேமிப்பா? பிஹார் தேர்தலா? டிரம்ப், அவரது வரியா? அல்லது இவை அனைத்துமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 4, 2025

காந்தி பொன்மொழிகள்

image

*மிருகங்களை போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
*கண் பார்வையற்றவன் குருடன் அல்ல, தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.
*நல்ல நண்பனை விரும்பினால் நீ நல்ல நண்பனாய் இரு.
*பெண்களே, ஆசைகளுக்கும் ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.
*எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.

News September 4, 2025

மலையாள சினிமாவில் கும்பமேளா மோனலிசா

image

ஒரே நைட்டில் ஃபேமஸானவர்கள் பட்டியலில் எப்போதும் கும்பமேளா மோனலிசா போஸ்லேவுக்கு தனியிடம் உண்டு. இவர் பாலிவுட்டிலும் படம் நடித்து வருகிறார். இதனிடையே, சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கேரளாவும் வந்தார். இந்நிலையில், மலையாள சினிமா அவரை வரவேற்றுள்ளது. இதன்படி, நடிகர் கைலாஷ் உடன் இணைந்து ‘நாகம்மா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை வீடியோ தற்போது வைரலாகிறது.

error: Content is protected !!