News December 21, 2024
₹1000 கோடி வசூல் படங்கள் எல்லாமே நல்ல இருக்கா?

₹1000 கோடி தான் டார்கெட்டாக மாறிவிட்ட சூழலில், அப்படங்கள் மட்டுமே அவ்வளவு சிறப்பானவையா? அந்த வசூலை எட்டிவிட்ட படங்கள் அனைத்துமே உங்களை மகிழ்வித்ததா? ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வளவு ஈர்ப்பு உண்மையில் இருந்ததா? இவற்றில் வன்முறை அல்லது ஹீரோயிசம் தான் அதிகம் உள்ளது. அவையும் அந்த அளவிற்கு கொண்டாட வைத்ததா? படம் பார்க்கும் அனைவருக்குமே ஒரு கருத்து இருக்கும் அல்லவா, உங்கள் பதிலை சொல்லுங்களேன்..
Similar News
News March 28, 2026
கந்தர்வகோட்டைக்கு பதில் பாஜகவுக்கு புதிய தொகுதி?

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்கு பதிலாக வேறொரு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. EPS-வுடன் Ex அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து பேசி வருகிறார். அதில், கந்தர்வகோட்டை தொகுதியை மீண்டும் பெற்றுக்கொண்டு, சென்னையில் ஒரு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கலாம் என இருவரும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
BREAKING: சுந்தர்.சி தேர்தலில் போட்டி.. எந்த தொகுதி?

மதுரை மத்திய தொகுதியில், புதிய நீதிக்கட்சியின் வேட்பாளராக நடிகர் சுந்தர்.சி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின்போது, வேலூரில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து சுந்தர்.சி பரப்புரை செய்தார். தற்போது, அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைந்துள்ள அவர், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
என் மீது எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை: விஜய் சேதுபதி

தன் மீது தனக்கு நம்பிக்கை இருந்ததே இல்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார். தன்னுடைய வேலையை மற்றவர்கள் பாராட்டிய பிறகுதான் தனக்கே அந்த வேலையை ’தன்னால் சிறப்பாக செய்யமுடியும்’ என்பது தெரியவரும் என பேசிய அவர், ஆனால், அதற்கு முன் தன் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் தனக்கு இருந்திருக்கிறார்கள் என்றார். இதுபோல் பலர் தன்னை நம்பியதால் தான், தன் தன்னம்பிக்கை வளர்ந்ததாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.


