News December 21, 2024
தொண்டி அருகே சிறுமி கர்ப்பம்: கணவன் உள்பட 3பேர் மீது வழக்கு

தொண்டி பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கு கடந்த15.9.2024-அன்று திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. சிறுமி அளித்த புகாரின் பேரில் கணவர் உள்பட 3பேர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருவாடானை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News August 22, 2025
ராம்நாட்டில் சிதைந்து கிடந்த ஆண் உடலால் பரபரப்பு!

ராமநாதபுரம்: சக்கரைகோட்டை ரயில்வே கேட் பகுதியில் நேற்று(ஆக.21) காலையில் ரயிலில் அடிபட்டு 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் முழுவதுமாக நசுங்கி, துண்டு துண்டாக முகம் சிதைந்து முற்றிலும் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது. இறந்து கிடந்த நபர் யார்?, இது தற்கொலையா (அ) தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் கேணிக்கரை போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
News August 21, 2025
சக்கரகோட்டை அருகே ரயிலில் அடிபட்டி ஒருவர் உயிரிழப்பு

இன்று காலை சுமார் 7 மணிக்கு முன்பாக உச்சப்புளி ரயில் நிலையத்திற்கும் ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே சர்க்கரை கோட்டை ரயில்வே கேட்டு அருகே மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவில் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் ராமேஸ்வரம் மதுரை பயணிகள் ரயில் வண்டியில் அடிபட்டு பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
News August 21, 2025
ராம்நாடு: போலீஸ் வேலையில் சேர சூப்பர் வாய்ப்பு! APPLY NOW

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதி – 10th/ <