News December 21, 2024
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நேரம் மாற்றப்படுகிறது. நெல்லையிலிருந்து இரவு 8.05 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்படும். இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணி போர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Similar News
News March 8, 2026
திருநெல்வேலி கலெக்டர் அதிரடி!

சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 7 பிடிஓ பணியிட மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் சுகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அம்பை பிடிஓ பொன்னுலட்சுமி நெல்லை தெற்கு உதவி இயக்குனர் பி டி ஓவாக மாற்றப்பட்டுள்ளார். இந்த பணியில் இருந்த உலகம்மாள் அம்பைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். வள்ளியூர் பிடிஓ மனோகர் மானூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
News March 8, 2026
திருநெல்வேலி: கார் விபத்தில் திமுக நிர்வாகி பலி

தாழையூத்தை அடுத்த சங்கர் நகர் சாரதாம்பாள் நகரை சேர்ந்த ராஜா மணி. (பேரூா் திமுக அவைத்தலைவர்) நேற்று முந்தினம் இரவு அங்குள்ள நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பால பகுதியில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத கார் மோதி படுகாயம் அடைந்தார். பாளை GH-ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ராஜாமணி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
News March 8, 2026
நெல்லையில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.


