News December 21, 2024
SUNDAY கிச்சன் டிப்ஸ்

*சிறிது நெய்யில் கடுகு, 5 மிளகு சேர்த்து தாளித்தால் ரசம் வாசனை தூக்கும்.
*உளுத்தம் பருப்புடன் 6 முந்திரி சேர்த்து அரைத்து வடை செய்தால், மிருதுவாக இருக்கும்.
*அரை கப் சிறு பயிறு, கால் கப் வேர்க்கடலை சேர்த்து அடை மாவு அரைத்தால் சாப்பிட ருசியாக இருக்கும்.
*புளித்த தயிருடன் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால், தயிரில் இனிப்பு சேர்ந்து புளிக்காமல் பாதுகாக்கும்.
Similar News
News March 7, 2026
அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் சிக்கலா?

சமீபத்தில் டெல்லி சென்ற EPS, தொகுதி பங்கீடு விவரங்களை அமித்ஷாவிடம் வழங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது பாஜகவின் விருப்ப பட்டியலில் திருத்தங்கள் செய்யவேண்டும் என அமித்ஷா கூறினாராம். பின்னர், அன்புமணி தந்த 30 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை EPS சரிபார்த்த போது, அதில் அதிமுகவினர் எதிர்பார்க்கும் மயிலம், மேட்டூர் உள்ளிட்ட சில தொகுதிகளும் இருப்பதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறதாம்.
News March 7, 2026
ராஜ்ய சபா துணை தலைவராகிறாரா தம்பிதுரை?

ராஜ்ய சபா துணை தலைவரான நாராயண் சிங்கின் பதவிக்காலம் ஏப்.9-ல் நிறைவடைகிறது. இந்நிலையில், புதிய துணை தலைவர் பதவியை ராஜ்ய சபா எம்பியாக தேர்வாகவுள்ள தம்பிதுரைக்கு பாஜக வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், லோக்சபாவில் துணை சபாநாயகராக பதவி வகித்த அனுபவம் அவருக்கு உண்டு. அதேநேரம், லோக் சபாவில் துணை சபாநாயகர் பதவியை நிரப்பாதது போல், ராஜ்ய சபாவிற்கும் அதே முடிவை மத்திய அரசு எடுக்கலாம்.
News March 7, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 7, மாசி 23 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்


