News December 21, 2024
கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை

2025ஆம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச அதரவு விலக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதலின்படி அரவை கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ₹11,582 மற்றும் அரவைக்கு முந்தைய கொப்பரை, குவிண்டாலுக்கு ₹12,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
எடுத்த காரியத்தில் இருந்து பின்வாங்காதீர்கள்…

செய்தாக வேண்டும் என முடிவெடுத்து தொடங்கிய காரியத்தை பாதியில் நிறுத்துவது, நாமே தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம். செய்ய முடியும் என நினைத்தால், அதனை செய்வதற்கான வழியைத் தேடுங்கள். பாதியில் நிறுத்துவதற்கு முன், ஏன் – எதற்காக – எங்கிருந்து தொடங்கினோம் என்பதை ஒரு முறை நினைத்து பாருங்கள். முயற்சியை நீங்கள் கைவிடும் போது தான், வெற்றி உங்களைக் கைவிடும். நம்பிக்கையுடன் போராடுங்கள். வெற்றி நிச்சயம்!
News July 6, 2025
வரலாற்றில் முதல் முறை.. சரித்திரம் படைத்த கில் படை!

இந்திய அணி 2-வது டெஸ்டில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து 1014 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இந்திய அணி டெஸ்ட் மேட்ச் ஒன்றில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே. 1000 ரன்களை கடப்பதும் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக 2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் 916 ரன்களை அடித்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
News July 6, 2025
விஜய்க்கு பதிலடி கொடுத்த நேரு

திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என விஜய்யின் பேச்சுக்கு அமைச்சர் நேரு பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாங்கள் விஜய்யை கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே என பதிலடி கொடுத்தார். இந்த செய்தி வெளியான உடன், அரசியலில் எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை; 2026 தேர்தலுக்கு பிறகு என்ன வேண்டுமானாலும் (திமுக – தவெக கூட்டணி) நடக்கலாம் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.